preloader

கங்க இஹல கோறளே பிரதேச செயலகப் பிரிவின் விசேட இடங்கள்

இடம் அமைவிடப் பிரிவூ
01.சங்;கராஜ குகை கல்பாய
02.ரன்தட்டியா தடாகம் கல்பாய
03.டெம்பேகும்புர எல்லைக் கல் ஹெர்குலஸ்
04.தியபுபுல ஹெர்குலஸ்
05.வல்வாசகொட ரஜமகா விகாரை ஹெர்குலஸ்
06.பெரவில மாத்தளாகல தேவாலயம் பதிதலாவ
07.கரகல தேவாலயம் பதிதலாவ
08.உடகம பத்தினி தேவாலயம் உடகம
09.யட்டபான பத்தினி தேவாலயம் யதபன
10.வெட்டகேதெனிய அம்பலம் வேதகெதெனிய
11.ராக்ஷாவ மலைச் சிகரம் என்ற கிணிஹிரியாகல குன்று ரக்ஷவா
12.அசுப்பிணி நீர்வீழ்ச்சி என்ற திஸ்குமார நீர்வீழச்சி உடுவெல்ல
13.ருவன்கூர நீர்வீழச்சி கெமுனுபுர
14.தேத்திரி நீர்வீழச்சி கலமுதுனா

சங்கராஜ குகை

செவிவழித் தகவல்களுக்கமையப் பொலநறுவைக் காலத்தில் தோற்றம் பெற்ற மன்னன் வியஜயபாகு சோழர்களுக்குப் பயந்து அம்புளுவாவ குகையின் கிழக்குச் சரிவில் அமைந்திருந்த பாரிய கற்குகையில் ஒளிந்திருந்து படையினரை வழிநடத்தியதாகக் குறிப்பிடப்படடுகின்றது.

முதலாம் விஜயபாகு இச்தச் சமரில் வெற்றியீட்டிதைத் தொடர்ந்து சிவனொளிபாத வழித்தடத்தை அமைக்கும்போது உபலனய போன்ற கிராமங்களைப் பரிசளித்ததாக அம்பகமுவ சுவடுகள் குறிப்பிடுகின்றன. பொலநறுவைக் காலத்திலிருந்து இந்தக் குகை யோகிகளது வாழிடமாகக் காணப்பட்டது. மேலும் கரைநாட்டு வனவாசிகள்இ விகாரைவாசிகளுள் ஒருவரான பிக்கு ஒருவர் மலைநாட்டுக்கு வந்து அம்புளுவாவயின் இலுப்பஸ்ஸவூக்கு வந்திருந்ததாக அளுதெனிய விகாரையின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்இ சூரியகொட விகாரையில் வசித்த வெலிவிட்ட சங்கராஜ தேரர் அம்புளுவாவ கற்குகை ஒன்றில் வசித்ததாக அளுதெனிய விகாரையின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதற்கமைய யோகிககள் வசித்தமையினால் இந்தக் குகை சங்கராஜ குகை என அழைக்கப்படுவதாக நினைக்க முடியூம்.

ரன்;தெட்டிய தடாகம்

அம்புளுவாவ மலையூச்சிக்குச் சிறிது கீழாகத் தென்கிழக்குத் திசை நோக்கி கல்பாய பிரிவில் இந்தத் தடாகம் அமைந்துள்ளது. செவிவழித் தகவல்களுக்கமைய இந்தத் தடாகம் கடும் கோடை காலத்திலும் வற்றாது இருக்கும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

வரலாற்றுத் தகவல்களுக்கமைய மூன்றாம் விஜயபாகு மன்னன் காலத்தில் ஹென கந்த பிஸோ பண்டார என்ற அரசி காடுகளது அழகை இரசிக்கச் சென்றிருந்த வேளையில் இந்தத் தடாகத்திலிருந்து தனது தாகத்தைத் தீர்த்துக்கொள்ள நினைத்துத் தமது இரு கைகளையூம் நீட்டும்பொது 7 தங்கத் தட்டுகள் நீரில் இருந்து தோன்றியூள்ளன. அவற்றிலொன்றை எடுக்கும்போது ஏனையவை நீரில் மறைந்து விட்டன. ஆரசி கையிலெடுத்த தங்கத் தகட்டினால் தாகத்தைத் தீர்த்த பின்னர் அதனைத் தடாகத்தில் போட்டுள்ளார் என செவிவழிக் கதைகள குறிப்பிடுகின்றன. துடாகத்தில் தங்கத் தட்டுகள் மிதந்து வந்தமைக்காக அது ரண்தெட்டிய தடாகம் என அழைக்கப்படுகின்றது.

டெம்பேகும்புர எல்லைக் கல்

வல்லஹகொட கிராம அலுவலர் பிரிவின் கொஸ்கொல்ல புகையிரத வீதி அருகில் அமைந்துள்ள இந்த தனிக்கல் டெம்பேகும்புரவின் எல்லையைக் குறிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள தனிக்கல் ஆகும். இதில் நாய் ஒன்றினதும் காகம் ஒன்றினதும் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புண்ணிய சொத்தாக உள்ளதெனவூம்இ எவரேனும் அனைப் பயன்படுத்தினால் அடுத்த பிறவியில் அவர்கள் நாய் ஒன்றாகவோ அல்லது காகம் ஒன்றாகவோ பிறப்பர் என்ற விடயத்தை இது குறிப்பிடுவதாக செவிவழிக் கதைகள் குறிப்பிடுகின்றன. வரலாற்றுக் கதைகளுக்கமையஇ கம்பளை இராசதானியின் மூன்றாம் விக்ரமபாகு மன்னன் புத்த சாசனத்தின் எழுச்சிக்கெனப் பாரிய சேவையை ஆற்றியூள்ளான். ஆதற்கமைய வல்வாசகொட ரஜமகா விகாரையின் பௌத்த பூசைகளுக்கென நெல்வயல் ஒன்றைத் தானம் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமையஇ இந்த எல்லைக்கல் அக்காலத்து உரிமையைக் குறிப்பிடுவதற்காக இடப்பட்டதாக நம்பப்படுகின்றது.

தியபுபுல

வரலாற்றுப் புகழ் வாய்ந்த இந்த இடம் வல்லஹகொட பிரிவில் அமைந்துள்ளது. சமன்கிரி வனத்தைத் தரிசிப்பது அக்கால்து மன்னர்களது புண்ணிய கருமமாக இருந்தது. இந்த வழித்தடம் அம்புளுவாவ குன்றின் ஊடாக வல்லஹகொட ரஜமகா விகாரை அமைந்திருந்ததென செவிவழிக் கதைகள்

குறிப்பிடுகின்றன. இந்த வழித்தடத்தின் ஒரு தரிப்பிடமாக தியபுபுல கருதப்பட்டது. சலாகம சிவனொளிபாதமலை யாத்திரிகர்களது தங்குமிடமாக அமைந்திருந்தது.

தற்காலத்தில் வல்வாசகொட கிராம அலுவலர் பிரிவூக்;கு மிக அருகில் ஹெரகொல கிராம அலுவலர் பிரிவின் ஹத்துகொட கிராமத்தில் இந்த தியபுபுல நீரூற்றைக் காண முடிகின்றது. அக்காலத்தில் சாலாகம என அழைக்கப்பட்டது இந்த ஹத்துகொட கிராமமாகும்.

வல்வாசகொட தேவாலயமும் ரஜமகா விகாரையூம்

வரலாற்றுப் புகழ்மிக்க வல்வாசகொட தேவாலயம் வல்வாசகொட விகாரை அமைக்கப்பட முன்னர் கட்டப்பட்டதெனப் பிரசித்தமானது. தோல்பொருள் பெறுமதி கொண்டுள்ள கண்டி தலதா பெரஹராவூக்குச் சமமாக அதற்குப் 15 நாட்களின் பின்னர் ஆண்டுதோறும் பெரஹரா நடத்தப்படும் புராதன வரலாற்று நடைமுறைகைளைப் பாதுகாக்கும் வணக்கத்தலமாக இது உள்ளது.

வெட்டகேதெனிய அம்பலம்

இந்த அம்பலம் வெட்டகேதெனயிவில் அமைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அம்பலம் அரநாயக்க செலவ என்ற பகுதியிலிருந்து மக்கள் இளைப்பாறும் இடமாகக் கருதப்படுகின்றது. இந்த அம்பலத்தின் கூரை 4 பிரிவூகளாக வகுக்கப்பட்டுள்ளது.

கல்பாய அம்பலம்

கல்பாய அம்பலம் என்பது மீத்தலாவ பிரN தசத்தில் அமைந்துள்ளது. முற்காலத்தில் சிவனொளிபாதமலை யாத்திரிகர்களது தரிப்பிடமாக இது இருந்ததெனக் கருதப்படுகின்றது. 1924 ஆம் ஆண்டின் பின் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் இந்த அம்பலத்தை அமைத்துள்ளதாக அதன் பலகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடுவெல்ல அம்பலம்

இது உடுவெல்ல கிராமத்தில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் இதில் ஒரு பாடசாலை நடத்தப்பட்டு வந்துள்ளதாகக் குறிப்பிடப்படடுகின்றது. பின்னர் இது சிதைவூக்கு உட்பட்டுள்ளது.

அசுபிணி நீர்வீழ்ச்சி என்ற திஸ்குமார ஹெல

கங்க இஹல கோறளேயில் உடுவெல்ல கிராம அலுவலர் பிரிவின் உடுவெல்ல பஹலகம கிராம எல்லையில் ரஹலகல குன்று மற்றும் மல்கொல்ல குன்றுகளிடையே கரைகளில் இந்த நீர்வீழச்சி அமைந்துள்ளது. சுமார் 300 அடி உயரத்தையூம் 40 அடி அகலத்தையூம் கொண்ட இரண்டு மாடிகளிடையே விழும் மனங்கவர் நீர்வீழ்ச்சியாக உள்ளது. வரலாற்று மற்றும் அழகியல் வகையில் மனங்கவர் நீர்வீழ்ச்சியான இது முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த நீர்வீழ்ச்சியின் ஆரம்பம் மாஓயா ஆகும். இயற்கை அன்னையின் விசித்தரமான படைப்பாக இதனைக் குறிப்பிடலாம்.

ராக்ஷாவ (ராஸ்ஸகல) மலைச் சிகரம் என்ற கினிஹிரியாகல மலை

கங்க இஹல கோறளே பிரதேச செயலகப்பிரிவில் மிகவூம் முக்கியம் வாய்ந்த பிரதேசமாக இது கருதப்படுகின்றது. இது தொடர்பான செவிவழிக் கதைகள் மூலம் பல தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. ராக்ஷாவ மலைச் சிகரத்திலிருந்து மாஓயா ஊற்றெடுக்கின்றது. மாஓயா நீரால் போஷிக்கப்படும் பிரதேசமாக இது உள்ளது. அபூர்வ மருந்து மூலிகைகள் மற்றும் பல்வேறு உயிரினங்களும் காணப்படுவதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவற்றிடையேஇ மான்கள்இ மரைஇ மர அணில்இ ஆந்தைகள்இ மந்திகள்இ காட்டுக் கோழிகள் என்பன முதலிடம் பெறுகின்றன. இராவணன் மன்னனுக்கு ஆயூதங்கள் தயாரித்த பட்டறைகள் இங்கு இருந்ததாக வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த மலைக் குன்றில் அமைந்துள்ள நீர்த் தடாகம் அந்த ஆயூதங்களை உயிரூட:டுவதற்கெனப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த செவிவழித் தகவல்களில் மெய்த்தன்மை எவ்வாறு இருந்தாலும்இ இப்பிரதேசம் இரும்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. கினிஹிரியாகல என அழைக்கப்படுவதிலிருந்து இது உறுதியாகின்றது. ராக்ஷாவ குன்றின் அருகில் அமைந்துள்ள அலுகொல்ல என்ற கிராம மக்கள் குறித்த பட்டறைகளிலிருந்து இரும்பு தயாரித்த பின்னர் எஞ்சியூள்ள பொருட்கள் இந்தக் கிராமத்தில் கொண்டுவந்து இடப்பட்டன எனவூம்இ அதனால் இக்கிராமம் அலுகொல்ல எனப் பெயர் பெற்றதாகவூம் தெரிவிக்கப்படுகின்றது. இப்பிரதேசத்தில் பரல்கள் மற்றும் மேற்பூச்சுகளை இன்றும் காண முடிகின்றதெனக் கிராமவாசிகள் குறிப்பிடுகின்றனர். குறித்த உருண்டைகள் இன்று சீத்தா குலி என அழைக்கப்படுகின்றன.

மேலும் மன்னன் இராவணனது ஆபரணங்கள் ஒளித்து வைக்கப்பட்ட இடம் ‘ஆபரணகல’ எனவூம்இ பின்னர் அது பரணகல எனவூம்இ சீதையை மணமுடிக்கவென ‘தொலபோ’ பயிரை நாட்டிய இடம் தொலபோவல என இன்று அழைக்கப்படுகின்றது. அத்துடன் மன்னன் ராஜாதி ராஜசிங்கள் ராக்ஷாவையிலிருந்து வெடிமருந்துகளைக் கொண்டு சென்றதாகவூம் தெரிவிக்கப்படுகின்றது.

கபரகல

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் நாவலபிட்டிய தேர்தல் தொகுதியில் கங்க இஹல கோறளே பிரதேச சபையின் நிருவாகப் பிரதேசத்துக்குள் இலக்கம் 1054 பிட்டகந்த கிராம அலுவலர் பிரிவின் தொலபோவல கிராமத்தில் அமைந்துள்ள மனங்கவர் சுற்றுலாத் தலமான அழகுமிகு மலைத்தொடர் கபரகல என்பதாகும். தோலொஸடபாகே மலைத்தொடர்இ ஸப்த கன்யா மலைத்தொடர்இ தேதுகல மலைஇ பத்தலேகல மலைஇ அம்புளுவாவ மற்றும் ஹந்தான மலைத்தொடர் ஆகிய மலைகளால் சூழப்பட்டுள்ள மேட்டுநிலமாக இது உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 அடி உயரத்தில் உள்ள இங்கு சிவனொளிபாத மலை நன்கு தெரிகின்றது.

ரம்பொட நீர்வீழ்ச்சிஇ கெரடி நீர்வீழ்ச்சி என்பவற்i றநன்கு காண முடிகின்றது. கபரகல மலைத்தொடர் நுவரெலியாஇ கேகாலைஇ இரத்தினபுரி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்குரிய புவியமைப்பு பண்புகளைக் கொண்டுள்ள அழகிய பிரதேசமாகும். தோலொஸ்பாகே மலைத்தொடரின் ராக்ஷகல குன்றுக்கு உரிய கிணிஹிர அதன் அருகில் உள்ளது. ஹோட்டன் சமவெளிஇ வர்ள்ட் என்ட் மேட்டு நிலத்துக்கு உரித்தான புவிச் சரிதவியல் பண்புகளைக் கொண்டுள்ள சில இடங்கள் இங்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இயற்கை வனம்இ புன்னிலம்இ சமநிலம் என்பவற்றைக் கொண்டுள்ள மேட்டு நிலமாக இது உள்ளது. இயற்கையான 4 இரசிக்கும் தலங்களையூம் முகாம்களை அமைக்கக்கூடிய இடங்களையூம் இது கொண்டுள்ளது. ஒரே நாட்டுத் தாவரம்இ ஒரே நாட்டு உயிரினம் என்பதுடன் உயிரியற் பல்வகைமையைக் கொண்ட சுற்றாடற் பிரதேசமான இப்பிரதேசம் தென்மேல் பருவக்காற்று மற்றும் காற்றுகளால் மழையைப் பெறும் இப்பரதேசத்தின் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சியாக 3350 மி.மீ. உம்இ வருடாந்த வெப்பநிலையாக 20 – 27 சென்ரிகிறேட் அளவையூம் கொண்டுள்ளதாக இப்பிரதேசம் காணப்படுகின்றது.